Showing posts with label மகிழ்ச்சியாக இருப்பதற்கு. Show all posts
Showing posts with label மகிழ்ச்சியாக இருப்பதற்கு. Show all posts

Tuesday, July 12, 2016

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை

Image result for maharaja imagesஅரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.