Showing posts with label வாழ்க மனிதநேயம்!. Show all posts
Showing posts with label வாழ்க மனிதநேயம்!. Show all posts

Thursday, January 26, 2017

வாழ்க மனிதநேயம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்க தக்க பால்பாண்டி பெரியவர் வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றி கொடுக்கிறார் .
மோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்கவைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார்