ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்கிறோம். நாம் உட்கொள்ளும் உணவு குளுக்கோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. இந்த குளுக்கோஸை உடல் பயன்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோனை இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் சுரக்கிறது.