கடலுார் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலுார் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலுார் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.