Thursday, March 14, 2019

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்

Image may contain: 1 person
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் திரு.சிட்டிபாபு அவர்கள் மூதாட்டியை மீட்டு சாப்பாடு மற்றும் புதுசேலை வாங்கி கொடுத்து முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். பின்னர் மூதாட்டியை அயனாவரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார். அவருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது அங்கிருந்தவர்களை மனம் நெகிழச்செய்தது. ஏற்கனவே காவல் ஆய்வாளர் திரு.சிட்டிபாபு அவர்கள் அனாதையாக சுற்றி திரிந்த 7 நபர்களை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval