Showing posts with label மனிதாபிமானம். Show all posts
Showing posts with label மனிதாபிமானம். Show all posts

Thursday, March 14, 2019

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்

Image may contain: 1 person
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

Wednesday, January 24, 2018

'மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை.

Image may contain: 1 person
துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன.

Tuesday, December 26, 2017

கணவன் மனைவி விபத்து, மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!

Image may contain: 5 people, people standing
உயிருக்கு போராடிய கணவன் மனைவியை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!
விழுப்புரம் சங்கராபுரம் அருகே பைக்கில் வந்த கணவன் மனைவி விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சிற்கு காத்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார் அவர்கள் தனது காரில் கணவன் மனையி இருவரையும் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

Tuesday, October 17, 2017

மனிதாபிமானம்

Image may contain: 1 person, outdoor
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த மெடிக்கல் ஷாப்பில் வாய்ப்புண் என்று மாத்திரை கேட்டேன்.. வாயை திறக்க சொல்லி பார்த்துவிட்டு "இது சூட்டுக்கு வர சாதாரண புண்ணு.. அதுவா சரியாகிடும், மாத்திரை தேவையில்ல போங்க"ன்னு சொல்லி அனுப்பினார்.
சொன்னபடியே மறுநாள் குணமானது. அது சாதாரண உடல் சூடு என கண்டறிந்தது அவர் மருத்துவ அனுபவமாக இருக்கலாம். அதைவிட அவருக்கு அந்த மாத்திரை குறைந்தது 20ரூ வியாபாரம். ஆனாலும் அவர் என்னை ஏமாற்றி விற்காதது அவர் மனிதாபிமானம்.

Saturday, September 30, 2017

புர்காவைக் கொண்டு இந்தியரின் உயிரைக் காப்பற்றிய அரபு பெண்மணி....!!

Image may contain: 1 person
துபாயில் ஒரு அரபுப்பெண்மணி தன்னுடைய புர்காவை கழட்டி இந்திய லாரி ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அணைத்ததோடு மட்டுமில்லாமல், அவரின் கண்ணியத்தையும் காப்பாற்றியுள்ளார்.
துபாயில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதால் தீப்பற்றிக்கொண்டன.

Sunday, June 12, 2016

திரு ப.சிதம்பரத்தின் மனிதாபிமானம்

இன்று மாலை சிவகங்கை அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் போது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட சாலை விபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊர்திக்காக காத்திருந்தோம்.

Monday, October 26, 2015

ஓட்டுநர், நடத்துநரின் மனிதாபிமானம் பயணிகள் பாராட்டு

busபயணத்தின்போது வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தி லிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து மதுரைக்குப் புறப்பட்டது.