சிறைசாலை பாடசாலையாக !
கைதிகள் ஆசிரியர்களாக !!
நபிகள் அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள் என்பதற்கு ஒரு வரலாற்று சம்பவம் சான்று இதோ..
நபிகளாரை கொலை செய்வதற்கு ஒரு பெருங்குழு மதீனாவை நோக்கி செல்கிறது.
பத்ர் எனுமிடத்தில் நபிளாரின் தோழர்கள்அந்த படையை முன்னேற விடாமல் மடக்கி தடுத்தார்கள்.
யுத்தக் கைதியாக பலர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்றைய யுத்த வழக்கப்படி யுத்தக் கைதிகளை வெற்றி பெற்ற அரசர்கள் கொலை செய்வதே வழக்கம்.
ஆனால் நபியவர்கள் அவர்களை தண்டிக்காமல் ‘முஸ்லிம்கள் பத்து பேருக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும்’ என அறிவித்தார்கள்.
"பத்து நபர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் உனக்கு விடுதலை " என்ற அந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.
ஒரே நேரத்தில் கல்வியையும் ஊக்குவித்தார்கள்,
யுத்தக் கைதியையும் விடுத்தார்கள்.
எதிராளியிடம்கூட கல்வி கற்கலாம்; தயக்கம் காட்டக் கூடாது என்பதை தம் தோழர்களுக்கு உணர்த்தியவர் நபிகள்.
கல்வி ஒன்றே உன்னை விடுதலை செய்யும் என்பதை தன்னை கொலை செய்ய வந்தவர்ளையும் உணரச் செய்தவர் #அய்யா_நபிகளார்
-- வரலாறு
கல்வியை ஊக்குவிக்கற யாரையும்
தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதே
என் கொள்கை ...கோட்பாடு ..லட்சியம்
வாழ்க ... நபிகளார் புகழ்
வளர்க ... கல்விக்கு கொடுத்த முன்னுரிமை கொள்கை
-- மணிகண்டன்
பெரியாரின் பேரன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval