கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் நெருங்கிய உறவுமுறை பேத்தி என்ற தகவல் என்னை ஆச்சர்யப்படுத்தியது..
பேராசிரியை நசீமா பானு பிறந்தது வளர்ந்தது எல்லாம் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகேயுள்ள தேரூரில்..
ஆரம்பக்கல்வியை சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்து கல்லூரியிலும், எம.ஏ.முதுகலைப் படிப்பை திருவனந்தபுரம் காரியவட்டம் பல்கலை கல்லூரியிலும் பயின்று புதுவை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்தார்..
கல்லூரியில் பணியாற்றிய ஆரம்ப காலத்தில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மீலாது விழாக்களில் உரையாற்ற வந்த அழைப்புகளை ஏற்று நபிகள் நாயகம் குறித்து தகவல்கள் திரட்டி உரையாற்ற துவங்கி படிப்படியாக இஸ்லாமிய மார்க்கம் குறித்த தேடல் அதிகமாகி இறுதியில் 1977ல். சத்திய மார்க்கத்தை தழுவினார்..
மிகவும் ஆசாரமான கவிமணி குடும்பத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் இஸ்லாத்தை தழுவிய செய்தி அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..அதே கல்லூரியில் பணியாற்றி வந்த காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் மு.சாயுபு மரைக்காயர் இவரை திருமணம் செய்து கொள்ள இருவரும் இணைந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்காற்றினார்கள்...
காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக 39 வருட கல்விப்பணியில் ஓய்வுபெற்ற நசீமா பானு 18 புத்தகங்கள் எழுதியுள்ளார்..புதுவை, காரைக்கால் கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடபுத்தகமாக உள்ளது.
புதுவை அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
இலங்கை அரசின் முஸ்லிம் பண்பாட்டுதுறை அமைச்சராக இருந்த எச்.எம் அஸ்வர் அழைப்பின் பேரில் தனது கணவர் பேராசிரியர் சாயுபு மரைக்காயருடன் சென்று 15 நாட்கள் இலங்கையின் பல்வேறு இடங்களில் மார்க்க சொற்பொழிவு ஆற்றியதை கவுரவித்து இலங்கை அரசு சார்பில் "நஜ்முல் கலாம்" விருது வழங்கப்பட்டது...
இறையருள்கலைமணி, இலக்கிய பேரரசி, இலக்கிய தென்றல் ஆகியவை பேராசிரியர் நசீமா பானுவின் இலக்கிய பணிகளுக்கு மகுடம் சூடிய பிற பட்டங்கள்...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் இவரது வாழ்க்கை வரலாறு சார்ந்த நசீமாபானு என்ற புத்தகம் வெளியிட்டு கவுரவித்துள்ளது...
தனது துணைவி பேராசிரியை நசீமா பானு புதுவை மற்றும் தமிழகம் முழுவதும் 80 பள்ளிவாசல் திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியதை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் Sayabu Maraicar ..
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு அளப்பரிய பணியாற்றி வரும் இலக்கிய இணையர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்...
Colachel Azheem
(பேராசிரியர் சாயுபு மரைக்காயர் அவர்களின் அனுமதியுடன் கூடியபதிவு)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval