இன்று எனது 62வது அகவை ஆரம்பம் இன்று முதல் நான் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் கல்லூரி வாழ்க்கையை முடித்த பின் 1980ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனிக்கு சென்று அங்கு இரண்டு ஆண்டு காலம் பணியாற்றிவிட்டு 1982ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடி புகுந்தேன் கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் என்னுடைய பணியை துவங்கினேன் பதிமூன்று ஆண்டு காலம் இங்கு பணியாற்றிவிட்டு பாஸ்டன் நகரம் சென்றேன் அங்கு ஆறாண்டு காலம் அதற்குப் பின்பு இன்று வரை நீ யார்க் நகரில் பணிபுரிந்து இன்று முதல் ஓய்வு பெறுகிறேன் (ரிட்டையர்ட்) ஆரம்ப காலத்தில் ஹாஸ்பிட்டாலிட்டி,, டெலி மார்க்கெட்டிங், பேங்கில் கேசியர் and கஸ்டமர் சர்வீசாக பணிபுரிந்தேன் சுயமாகத் தொழில் செய்தேன் இப்படி பன்முக துறைகளில் ஈடுபட்டு 42ஆண்டு கால உழைப்பிற்குப் பின் ஓய்வு பெறுகிறேன் "அதிர்ந்திடும் இளமைப் பொழுதில் ஆவன அறங்கச் செய்து முதிந்திடும் பருவந் தன்னில் மக்களுக்கு முடியைச் சுட்டி எழுந்திடும் துன்பம் ஏதும் இல்லாமல் மக்கள் பேரர் வகுந்திடல்கண்டு நெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு"எனப் பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை நெஞ்சில் தாங்கி என் உழைப்பின் மூலம் குடும்பத்தையும் ஓரளவு சமுதாயத்திற்கும் செவ்வனே செய்து முடித்தேன் இன்ஷாஅல்லாஹ் இனிமேல் அதிகமாக இறை ஈடுபாட்டிலும் பொது சேவைகளில் என் அந்திமக் காலம் வரை நோய்நொடி இல்லாது குடும்பத்தோடு சந்தோசமாய் வாழ இறைவன் அருள் புரியட்டும் உலகமெல்லாம் சுற்றி தெரிந்தாலும் கடைசி காலத்தில் தாயகத்தில் இருப்பதே மேல் என்ற எண்ணத்தில் தாயகம் கூடிய விரைவில் திரும்புகிறேன் உங்கள் அனைவரின் துவாவுடன் ஆசியுடனும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
என்றும் அன்புடன் உங்கள்
அப்துல் வாஹித்
1st/June/2021
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval