சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று முதல், அடையாள அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது. ‘சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.