Showing posts with label உதவ வேண்டும். Show all posts
Showing posts with label உதவ வேண்டும். Show all posts

Thursday, June 2, 2016

உதவ வேண்டும் .... உதவிக்கொண்டே இருக்க வேண்டும்


கடந்த ஆண்டு ஒரு நாள் பணி நிமித்தமாக திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் போது ஒரு பெரிய பாலத்தில் ஒரு தள்ளு வண்டி நிறைய இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு இழுத்துச்சென்றவரின் வண்டியை எங்கள் வாகனம் கடந்த போது வயதான ஒரு பெரியவர் அந்த வண்டியை தள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டதை கவனித்த நான் எனது காவல் ஓட்டுநர் தம்பியை எங்கள் வாகனத்தை பாலத்தின் மறுபக்கம் நிறுத்தச் சொல்லி விட்டு இறங்கினேன் . என்ன காரணம் என்பதை எனது ஓட்டுநர் தம்பி அறியவில்லை . ஓடிச்சென்ற நான் அந்தப் பெரியவரின் தள்ளுவண்டிக்கு பின் சென்று தள்ளினேன் .