கடந்த ஆண்டு ஒரு நாள் பணி நிமித்தமாக திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் போது ஒரு பெரிய பாலத்தில் ஒரு தள்ளு வண்டி நிறைய இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு இழுத்துச்சென்றவரின் வண்டியை எங்கள் வாகனம் கடந்த போது வயதான ஒரு பெரியவர் அந்த வண்டியை தள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டதை கவனித்த நான் எனது காவல் ஓட்டுநர் தம்பியை எங்கள் வாகனத்தை பாலத்தின் மறுபக்கம் நிறுத்தச் சொல்லி விட்டு இறங்கினேன் . என்ன காரணம் என்பதை எனது ஓட்டுநர் தம்பி அறியவில்லை . ஓடிச்சென்ற நான் அந்தப் பெரியவரின் தள்ளுவண்டிக்கு பின் சென்று தள்ளினேன் . பாலத்தின் மேட்டுப்பகுதி வரை தள்ளி வந்த எனக்கே வியர்த்துக்கொட்டியது . அந்தப்பெரியவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்த போது தான் தற்செயலாக கவனித்தேன் , வாகனங்களை நிறுத்தி விட்டு எங்களை நிறைய பேர் தங்களது cell phone ல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் . காரணம் நான் காவல் சீருடையில் இருந்தேன் . பயங்கரமான கோபத்துடன் ," ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள் என்றேன் , " face book ல் போடுவதற்கு என்றார்கள் . அங்கேயே எல்லாரையும் படங்களை delete பண்ணச்சொல்லி விட்டு புறப்பட்டேன் ... ஒரு வயதான பெரியவர் நம் கண் முன்னே ஒரு வேளை வயிற்றுப்பிழைப்பிற்காக கஷ்டப்படுவது வேதனைப்படுவது பற்றி கவலையே இல்லை . இப்படித்தான் இன்றைய சமுதாயத்தில் பிறர் படும் வேதனையில் உதவி செய்யும் எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை. இந்த உதவியை வேறு யார் செய்தாலும் படம் எடுக்க மாட்டார்கள் . இப்போது இதை இங்கே நான் குறிப்பிடக் காரணம் காவல் துறை அதிகாரி என்றால் மிடுக்காக நடப்பதும் சீருடையில் pose கொடுப்பதும் அல்ல ....இன்னல் யார் பட்டாலும் ஓடோடிச்சென்று முதலில் உதவ வேண்டும் .... உதவிக்கொண்டே இருக்க வேண்டும் ...பலன் கருதாமல் ...கஷ்டப்படுவது நமது சக மனிதன் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும் ..
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval