Thursday, June 9, 2016

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் !

Oberhofen Castle Located in Lake Thun Switzerland. Lake thun its also ...“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்குதுல, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.
1.ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும்.
2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும்.
3.சுவிஸியில் 5வருடமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி மற்றும் குட்டிப்பாப்பா இருந்தால் அந்த குடும்பத்திற்கு “அடிப்படை” ஊதியமாக மாதம் 3,95,000 அரசாங்கம் வழங்கும்.( சிவாஜில ரஜினி சொல்ற மாதிரி அவங்க ‘சும்மா இருந்தா மட்டும் போதும்’)
இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்களிப்பை அரசாங்கம் நடத்தியது, அந்த வாக்களிப்பின் முடிவு உலகையே மற்றோரு முறை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
5யில் 4ங்கு பேர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.78% சதவீதம் பேர் “சுவிஸ்” அரசின் ‘அடிப்படை’ ஊதியம் எங்களுக்கு வேண்டாம் என்று தங்கள் முடிவை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுக்கும் அவர்கள் சொல்லும் காரணம் இன்னமும்
வியப்பாகவுள்ளது.
1.இந்த அறிவியப்பை கேட்டு , இன்னும் சில வருடங்களில் கோடி கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் சட்டரீதியாகவும்,சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.
2.இந்த அடிப்படை ஊதிய சட்டம் எங்களையும் எங்கள் சன்னதியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.
3.அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.
இது சரித்திரத்தில் எழுதவேண்டிய நாள், ஸ்விஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.
நாம் இன்னமும் தமிழ், சோழர்கள், திருக்குறள், சித்தர்கள் என்று பழையபெருமையை வெட்கமில்லாமல் பாடிக்கொண்டு கிடைக்கும் 1000,2000 ரூபாய்க்கும் சொல்ற கட்சிக்கு கண்ண மூடிக்கொண்டு ‘ஓட்ட’ப் போட்டுட்டு, இலவசமா ‘பினாயில்’ குடுத்தா கூட போட்டிப்போட்டு வாங்கி குடிக்கிறோம்.
இதுல எதுக்கு எடுத்தாலும் ஒரு பஞ்ச் டயலாக் வேற “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி”னு அநேகமா இந்த வரியை உச்சரிக்கும் கடைசி சந்ததி நாமகத்தான் இருக்கும், நம் அடுத்த சந்ததி நம்மை நினைத்து நிச்சயம் பெருமைபட மாட்டாங்க.
நம்மைப் போல் சுவிஸ் நாட்டிற்கென்று பலபெரும் பெருமை இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர் காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்காலப் பெருமையை.
வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே !

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval