Friday, June 3, 2016

பஸ், கார்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் பலியானார்கள்.


கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மறு மார்க்கத்தில் பஸ் வந்த சாலையில் சென்று, பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. இதில் 17 பேர் இறந்தனர்.
இந்த சம்பவத்தில் 17 பேரது உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களில் பலருக்கு எழும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. சூளகிரி போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval