Wednesday, June 22, 2016

உலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்


  •  தமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.  
  •   நீங்கள் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தில் பெருமிதங்கொள்ளக்கூடிய நபர் எனில் பத்திரிக்கைதுறைகளிலும், தொலைகாட்சிகளும், வானொலிகளிலும் அதிகமாக பேட்டி காணப்படும் இவரைப்பற்றி கேள்விப்படாமல்  இருந்திருக்கவாய்ப்பில்லை.
  • நீங்கள் விகடன் வாசகர் வட்டத்திலுள்ளவர் எனில் பலகல்லூரிகளில் பாடமாகவைக்கப்பட்டிருக்கும் இவரின்  ‘திறந்திடுமனசே’  எனும் புத்தகம்குறித்து தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. 
  • நீங்கள் தொலைகாட்சிகளில்  பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கும் நபர் எனில் மக்கள்தொலைகாட்சியில்  “மனம்தான் மூலதனம்”  எனும் தன்னம்பிக்கை தொடரை பார்க்காமல் இருந்திருக்கவாய்ப்பில்லை. 
யார் அவர் ?????
  • உங்கள் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராய் இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்;அல்லது அழைக்கப்படுவார்.
  • ஆழ்மனம் தொடர்பானவகுப்புகள் உங்கள் ஊர்களில் இவர் ஏற்கனவே நடத்தியிருக்கிறார்; அல்லது இனி  நடத்தவிருக்கிறார்.
  • புதுக்கவிதை எழுதும் முஸ்லிம் பெண்கள் யார் என உங்களிடம் கேட்கப்பட்டால் முதல் மூன்று பேரில் நீங்கள் உச்சரிக்கப்போகும் பெயர் இவருடையதாக இருந்திருக்கும்; அல்லதுஇனிஇருக்கும்.  
  • உலகின் கவனத்தை ஈர்த்த முஸ்லிம் பெண்கள் பற்றி கேள்வி வருகையில் வெளிநாட்டுப்பெண்மணிகளின் பெயரை வரிசைப்படுத்திய உங்களின் பட்டியலில் “இதோ எங்கள் தமிழ்ப்பெண்” எனும் பேரார்வத்துடன் இவரின் பெயர் இடம்பிடித்திருக்கும் ;அல்லது புறக்கணிக்கவியலா ஆளுமையாக முத்திரை பதிக்கப்போகும் பெயராக இருக்கும்.
இவை மட்டுமா?
  • முதல் கவிதை நூலே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்ட பெருமைக்குரிய இப்பெண்மணிக்கு துபாய்சங்கம் டிவி “கலைப்பேரரசி” எனும் பட்டத்தை வழங்கியிருக்கிறது.
  • குங்குமம் உட்பட பல பத்திரிக்கைகளில் இவரின் சிறுகதை , கவிதை வெளிவந்துள்ளது.
  • அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
மகிழ்ச்சித் தூதுவர் என்றும், சிறந்த குழந்தைகள் புத்தக எழுத்தாளர் என்றும் பலவாறாக போற்றப்பட்டு வரும் சர்வதேசப்புகழ் பெற்றுக்கொண்டிருக்கும் கீழக்கரைப் பெண் ஃபஜிலா ஆசாத்  அவர்களைத் தான்சாதனைப் பெண்மணிப் பகுதியை இம்முறை அலங்கரிக்கிறார். (

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval