மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷ்னரும், தற்போதையபாஜக எம்.பி.யுமான 'சத்யபால் சிங்' வீட்டில், போலீசார் நடத்திய ரெய்டில், 2 அழகிகள் மற்றும் 1 விபச்சார புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தேரி பகுதியில், பாட்லிபத்தர் என்ற அப்பார்ட்மெண்டின் 8வது மாடியில் விபச்சாரத்தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்த வண்ணமிருந்தது.
சனிக்கிழமை (31/05), இரவு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வாடிக்கையாளர் போன்று நடித்து போலீஸ் ஒருவர் உள்ளே நுழைந்து, தகவலை ஊர்ஜிதப்படுத்தியதை தொடர்ந்து, மேற்படி பில்டிங்கில் ரெய்டு நடத்தியதில், 2 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வீட்டுக்கு சொந்தக்காரர், முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனரும் தற்போதைய பாஜக எம்பியுமான, சத்யபால் சிங் என்ற அதிர்ச்சிகரமான தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
பாஜக எம்.பி. சத்யபால்சிங் கூறுகையில்:
விபச்சாரத்தொழிளுக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தம் இல்லை என்கிறார்.
தாம் கெஸ்ட் ஹவுசாக பயன்படுத்தி வந்த இக்கட்டிடத்தை, தற்போது 'இந்தியா புல்ஸ்' என்ற கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக கூறுகிறார்.
இந்தியா புல்ஸ் நிறுவனமோ, இக்கட்டிடத்தை தாங்கள் வாடகைக்கு எடுக்கவில்லை என மறுப்பதுடன், எங்கள் மீது குற்றம் சுமத்துவதாக இருந்தால், முதலில் 'ரெண்டல் அக்ரீமென்ட்' (வாடகை ஒப்பந்தம்) நகல் கொடுங்கள் என்கிறது.
மேலும், தங்கள் கம்பெனியிலிருந்து ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ராஜு, இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதைத்தவிர, எங்களுக்கும் விபச்சாரத்தொழிளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்கிறது, இந்தியா புல்ஸ்.
பாஜக எம்.பி. சத்யபால் சிங்கை நேரடியாக விசாரணை வளையத்தில் கொண்டு வராதவரை, இதில் உண்மை நிலை தெரியவராது, என்கிறது மும்பை போலீஸ் வட்டாரம்.
இக்கட்டிடத்தின் பராமரிப்பாளர் (கேர் டேக்கர்) என்ற பெயரில், விபச்சார புரோக்கராக செயல்பட்டு வந்த வக்கீல் 'ராஜு ஷா' என்பவரையும் போலீஸ் கைது செய்துள்ளது
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval