யாரும் கேட்கவில்லை.. எந்தவொரு இயக்கமும் போராட்டம் நடத்தவில்லை..
ஆனாலும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் தனது மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள தேவையறிந்து உதவுகிறார்..
இந்திய ஆட்சியியல் வரலாற்றில் ரம்ஜான் பண்டிகை சார்ந்து அரசாணை வெளியிட்டுள்ள முதல் மாநிலம் தெலுங்கானா...
வருகிற 26 ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 200 பள்ளி வாசல்களில் அரசு செலவில் இஃப்தார் நடத்தவும், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் சுமார் ஆயிரம் பேருக்கு நோன்பு திறப்பு செலவுக்கு தலா 2 லட்சம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் வாழும் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் புத்தாடை வழங்க சுமார் 8 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். கூடவே முஸ்லிம்கள் நடத்தும் அநாதை நிலையங்கள் மற்றும் மதரஸா மாணவர்களுக்கும் புத்தாடை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளார்..
மொத்தம் ரமலான் சிறப்பு நிதி ரூபாய் 18 கோடி ஒதுக்கி முதல்வர் சந்திர சேகர் ராவின் மனிதாபிமான சேவைகள் நன்றிக்குரியது..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval