அடங்கியுள்ள சத்துகள்
விட்டமின்சி, விட்டமின் இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
- தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
- மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.
- பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.
- வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற தேங்காய் பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.
- தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.
- வறண்ட போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.
- வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval