Thursday, June 30, 2016

திடீர் பொக்கிஷமாக மாறிய திருப்பத்தூர் ஏரி.. தோண்டத் தோண்ட தங்கம்.. ஆய்வில் குதித்த ஆர்க்கியாலஜி!


Medalsவேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏரி ஒன்றைத் தூர்வாரும் போது தோண்ட தோண்ட பழங்கால தங்க நகைகள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதையல் எதுவும் உள்ளதா என்பது பற்றி தொல்பொருள்துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர். திருப்பத்துார் அருகேயுள்ள பாப்பானேரியில், நேற்று முன்தினம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரியைத் தூர்வாரும் பணியில் 131 பேர் ஈடுபட்டனர். அப்போது சதுர வடிவில் டாலருடன் கூடிய தங்கச்சங்கிலி ஒன்று கிடைத்துள்ளது. தொடர்ந்து துார்வாரியபோது 7 சவரன் எடையுள்ள மற்றொரு தங்கச்சங்கிலித் துண்டும் கிடைத்தது. அவை திருப்பத்துாரில் உள்ள அரசு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. கலை நயத்துடன் கூடிய அந்த தங்கச்சங்கிலிகள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் ஏரியில் துார்வாரும் பணி நடைபெற்ற போது, மூன்று துண்டுகளாக மேலும் 66 கிராம் தங்கம் கிடைத்தது. அவையும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தங்கம் கிடைத்து வருவதால், இன்று தொல்பொருள் துறையினர் பாப்பனேரி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
courtesy;oneIndia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval