தாத்ரியில் கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்றும் எனவே படுகொலைசெய்யப்பட்ட அக்லக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் எனவும் இப்போது கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன.
தாத்ரியில் கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சிதான் என்பதை முதல்கட்ட போலீஸ் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. 2015 செப்டம்பர் 29 ஆம் தேதி அரசு கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் அளித்த அறிக்கையின் நகலை எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டின் மூத்த உதவி ஆசிரியர் அமன் ஷர்மா இன்று வெளியிட்டுள்ளார். கொல்லப்பட்ட அக்லக்கின் வீட்டில் அந்த இறைச்சி கைப்பற்றப்படவில்லை. பக்கத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில்தான் அது கைப்பற்றப்பட்டது. அந்த இறைச்சியோடு ஆட்டின் முன்னங்கால்களும், தோலுடன் இருந்த ஆட்டின் பின்னங்கால்களும், ஆட்டின் முகத்தின் தோலும் இருந்துள்ளன. தடயவியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபின் 2015 அக்டோபரில் அளிக்கப்பட்ட அறிக்கையோ அதை மாட்டிறைச்சி எனக் கூறுகிறது. அது இப்போது ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது.
அக்லக் படுகொலை செய்யப்பட்டதை அது ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என்பது நியாயப்படுத்திவிடாது.
2017 ல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் தாத்ரி விஷயத்தை முன்வைத்து மீண்டும் பரபரப்பை உருவாக்குகிறார்கள்.
நரி பரி ஆனது புராணம்!
ஆடு மாடாக மாறுவது அரசியல்!
ஆடு மாடாக மாறுவது அரசியல்!
படம்: கால்நடை மருத்துவரின் அறிக்கை
நன்றி : அமன் ஷர்மா
நன்றி : அமன் ஷர்மா
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval