தாத்ரியில் கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்றும் எனவே படுகொலைசெய்யப்பட்ட அக்லக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் எனவும் இப்போது கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன.
தாத்ரியில் கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சிதான் என்பதை முதல்கட்ட போலீஸ் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. 2015 செப்டம்பர் 29 ஆம் தேதி அரசு கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் அளித்த அறிக்கையின் நகலை எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டின் மூத்த உதவி ஆசிரியர் அமன் ஷர்மா இன்று வெளியிட்டுள்ளார். கொல்லப்பட்ட அக்லக்கின் வீட்டில் அந்த இறைச்சி கைப்பற்றப்படவில்லை. பக்கத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில்தான் அது கைப்பற்றப்பட்டது.