இவர் #செந்தில்வேலன். IPS . தந்தைக்காக MBBS படித்து விட்டு, அரசு மருத்துவராக பணி புரிந்து வந்த நிலையில் Civi Servise Exam .எழுதி அதில் வெற்றி பெற்று IAS பதவி கிடைத்தும், காக்கிச்சட்டையின் மேல் உள்ள காதலால் IPS தேர்ந்தெடுத்தவர். தஞ்சாவூர், கடலூர், திருச்செந்தூர், கமுதி என இவர் பணி புரிந்த அனைத்து இடங்களிலுமே அனல் பறக்கும் பணி மேற்கொண்டு காவல் துறைக்கென தனி மரியாதையை ஏற்படுத்தியவர். காக்கிச்சட்டையில் நெஞ்சை நிமிர்த்தி இவர் நிற்கும் தோரணையினாலே காக்கிச்சட்டை அணியும் காவலர்களுக்கு தனி பெருமிதத்திற்குரிய கர்வத்தை ஏற்படுத்தியவர். "இந்த மனிதருக்கு நெஞ்சு வளையவே வளையாதா? எதுக்குமே Compromise ஆக மாட்டேங்குறாரே" என காவலர்கள் வியந்ததுண்டு. இவர் அணியும் இந்த காக்கிச்சட்டையைதான் காவலர்கள் அணிகிறோம் என்ற கர்வத்தை எத்தனையோ காக்கிச்சட்டைக்காரர்களுக்கு ஏற்படுத்தியவர். இவரை பற்றி பேசினால் தொடர்ந்து கொண்டே போகும்.
எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மைக்கு பரிசாக சில சாதி சாக்கடைகள் கலவரத்தைப் பயன்படுத்தி இவரது 2 கால்களையும் சேதப்படுத்தியதில் கால் எழும்புகள் நொறுங்கி 9 மாதங்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தற்போது காவல் துறையின் முக்கியமற்ற ஒரு பிரிவில் ( Wing ) பணி புரிந்து வருகிறார். நேர்மை பரிகசிக்கப்படும் இது போன்ற தருணங்களில்தான், நேர்மை, நியாயம், தர்மம் என்ற வார்த்தைகள் இளைஞர்களுக்கு கேலிக்கூத்தாகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval