மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.
அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
எடை குறைவு :-
சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.
சளி, இருமல் நீங்கும் :-
சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.
மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-
சுடுநீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உடல் சுத்தமாகும் :-
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும்
முதுமையைத் தடுக்கும் :-
எசுடுநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.
செரிமான பிரச்சனை :-
செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் :-
செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-
சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயுடன் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval