ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், ‘அனுப்பவே இல்லை’ என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும்.