Sunday, January 31, 2016

ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையற்ற எஸ்எம்எஸ்களை தடுக்க

1407885558637_wps_3_CWDHKT_Young_girl_with_pa
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், ‘அனுப்பவே இல்லை’ என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். இதற்கு நாமே தீர்வு காணலாம்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் ‘‘SMS blocker’’ என டைப் செய்து தேடவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker – Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும்.
இதனை உடனடியாக டவுன்லோட் செய்து, உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் இதனை இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு SMS blocking என்பதிலும் Spam auto blocking என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.)
இனி, ஸ்பேம் செய்திகள் வரும் போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, ‘‘Block’’ என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். ‘‘Add New’’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும்.

அவை:
1) போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல்
2) எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல்
3) நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும்.
அடுத்ததாக, ‘‘Filter’’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம். இதனை செய்துவிட்டால் இனி தேவையற்ற எஸ்எம்எஸ்கள் பற்றிய கவலை வேண்டாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval