மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டரடாம்ஸ் . இவரது கணிப்புகள் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன. சாதாரண ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.
நாஸ்டிர் டாம்சின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.
நாஸ்டர்டாம்ஸ் 2016ம் ஆண்டில் கணித்துள்ள குறிப்புகளை இங்கு கானலாம்
* நாஸ்டர்டாம்ஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது. அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிர்டாம்ஸ் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை.
* 2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டர் டாம்ஸ் கூறியுள்ளார். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்தக் கணிப்பு பலிக்கமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
* 2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டர் டாம்ஸ் கூறியுள்ளார். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்தக் கணிப்பு பலிக்கமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
* 2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு மாறாக இடம் மாறும். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டரடாம்ஸ் சொல்லவில்லை.
* 2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியும். பெரும் சேதத்தை இவை சந்திக்கும்.
* மத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டரடாம்ஸ் கூறியுள்ளார். கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம்.
* இந்த ஆண்டில் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம். ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
* அமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டர் டாம்ஸின் இன்னொரு கணிப்பாகும். வெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.
* 2016ல் நடக்கும் என நாஸ்டரடாம்ஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் வெப்பம் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும்
* 2016ம் ஆண்டு இஸ்ரேலுக்கு பேராபத்து வரும் என்பது இன்னொரு கணிப்பாகும்.
* 2016ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.
courtesy;tamizthirai
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval