Sunday, January 31, 2016

இண்டர்வியூ வைக்காமல் வேலைக்கு ஆள் எடுக்கும் பிளிப்கார்ட்:

1
இந்தியாவின் முன்னனி இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது நிறுவனத்திற்காக ஆட்களை தேர்வு செய்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த யுடாசிட்டி(Udacity) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
யுடாசிட்டி நிறுவனம் நானோடிகிரி புரோகிராம் என்ற ஆன் லையன் கோர்சை நடத்திவருகிறது. இந்த கோர்சில் சிறப்பாக செயல்படுபவர்களை எந்தவித தேர்வும் வைக்காமல் வேலைக்கு எடுத்துக்கொள்கிறது பிளிப்கார்ட். இது குறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது “சிலருக்கு போதுமான திறமை இருந்தும் இண்டர்வியூ நடத்தப்படும் அந்த நாளில் சிறப்பாக செயல்படாமல் போகலாம். ஆனால் தற்போது பின்பற்றப்படும் முறையில் ஒருவரின் திறமையை முழுமையாக அறிந்துக்கொள்ள முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவது ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு நல்ல வரவேற்பும், அதிக சம்பளம் கிடைத்துவரும் நிலையில் இந்த துறையில் ஆர்வமுள்ளவர்கள் யுடாசிட்டி போன்ற நிறுவனங்களின் ஆன் லையன் கோர்சில் சேர்ந்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval