மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி தொடங்கியது போல் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய அரசியல் கூட்டணி தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் இயக்கங்களில் TNTJ வை தவிர அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.
ஆகையால் TNTJ வை மட்டும் தவிர்த்து விட்டு அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இஸ்லாமிய அரசியல் கூட்டணி உருவாக்கி....
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை ஆகிய இரட்டை கோரிக்கையை மட்டும் முன் வைத்து அதையும் ஏற்றுக்கொண்டு, இஸ்லாமிய அரசியல் கூட்டணிக்கு 30 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சிக்கே இஸ்லாமிய அரசியல் கூட்டணி ஆதரவளிக்கும் என்ற நிலைபாட்டை எடுத்தால் போயஸ் கார்டனும், கோபாலபுரமும் நம்மை தேடி வரும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, மஜ்லிசே இத்திஹாத்தில் முஸ்லிமின், இந்திய தேசிய உள்ளிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் தங்கள் தலைமையை இஸ்லாமிய அரசியல் கூட்டணி உருவாக்குவதற்கு வலியுறுத்த வேண்டும்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை, 30 சட்டமன்ற தொகுதிகளை பெற்றுக்கொண்டு இஸ்லாமிய அரசியல் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிக்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக முகநூல் முஸ்லிம் மீடியாவும் முழு மூச்சாக பிரச்சாரம் செய்யும்.
ஆதவன் உதிப்பது கிழக்காக இருக்கலாம், நாளைய வெற்றி நமக்காக இருக்கட்டும்.
courtesy;
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval