Friday, January 8, 2016

'அவுரங்கசீப்' இருந்தவரை ஆங்கிலேயர்களால் வாலாட்ட முடியவில்லை : சதாசிவ சுவாமிகள் புகழாரம்..!

கி.பி.1606 -ல் இந்தியாவில் அடியெடுத்து வைத்த ஆங்கிலேயர்கள், அவுரங்கசீப் உயிரோடிருந்த கி.பி.1707 வரை, வாலாட்ட முடியாமல் அடங்கி கிடந்தனர் என்ற வரலாற்று சம்பவங்களை 'சதாசிவ சுவாமிகள்' நினைவு கூர்ந்தார்.
கர்நாடக மாநிலம் 'குல்பர்கா'வில் நேற்றுமுன்தினம் (17-08-2015), 'இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற சதாசிவ சுவாமிகள், பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தினார்.
900 ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், சமூக நல்லிணக்கத்துடன் நடந்துக் கொண்டதாக கூறிய சுவாமிகள், அவுரங்கசீப் ஒரு நேர்மையான ஆட்சியாளர் எனக்குறிப்பிட்டு அவர் இருந்தவரை வெள்ளையர்களால் இங்கு காலூன்ற முடியவில்லை என்றார்.
1799-ல் திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு தான், 1803-ல் வெள்ளையர்கள் தங்களது ஆட்சியை பிரகடனப்படுத்தினர் என்றார் அவர்.
1857-ல் துவங்கிய இந்திய சுதந்திர போரில், அப்போது முஸ்லிம்களை தவிர எவருமே இல்லாத அந்தக்காலக் கட்டங்களில் லட்சக்கணக்கான முஸ்லிம் அறிஞர்கள் தூக்கிலடப்பட்டதாக தெரிவித்தார் சதாசிவ சுவாமிகள்.
வரலாறுகளை முழுமையாக படித்தால் மட்டுமே இந்த உண்மைகளை அறிந்துக் கொள்ள முடியும் என்று சொன்ன சுவாமிகள், சுதந்திர போரில் ஒற்றை சமூகமாக முஸ்லிம்கள் இறங்கிய சுமார் 30 ஆண்டுகள் கழித்து 1885-ல் தான் காங்கிரஸ் கட்சி உதயமாகியது என்றார் அவர்.
சுதந்திர போராட்ட வரலாறை 1799 முதல் படித்தால் தான் உண்மையான வரலாறை புரிந்துக் கொள்ளமுடியும் என்கிறார், சதாசிவ சுவாமிகள்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval