Tuesday, January 12, 2016

மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை.!

மென்ஸா அறிவுத் திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட மென்ஸா அமைப்பில் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தி மென்ஸா அமைப்பில் உறுப்பினராக இணைந்தவர்கள் ஆவர். மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகள் கொண்ட தேர்வை மென்ஸா நடத்தி வருகிறது.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றனர். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி காஷ்மியா அண்மையில் நடந்த மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் 162 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 11 வயதாகும் அவர் கூறியபோது, ஐன்ஸ்டினைவிட அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval