Friday, January 8, 2016

சமூக மாற்றம் குறித்த மிக நல்ல கருத்துக்கள்.

Image result for clean city images1. வீட்டை சுத்தமாக வைக்கும் மக்கள், பொது இடத்தை சுத்தமாக வைக்காமல் போக காரணம்.
2. சுத்தம் என பெயர் வாங்கிய சிங்கப்பூரில், நமது இந்தியர்கள் வசிக்கும் லிட்டில் இந்தியா எப்படி இருக்கிறது என பாருங்கள்.
3. டிராபிக் சிக்னல் இருக்கும் போது வாகன ஓட்டிகளை கண்காணிக்க போலீஸ் எதற்கு. குப்பைதொட்டி இருக்கும்போது அதை சுற்றியும் மற்ற இடங்களிலும் வீச காரணம். விதிகளை மீறுபவதே நமக்கு பழக்கப்பட்டவையாக உள்ளன.,.
4. இதை தீர்க்க பொது மக்களே, ஒன்று கூடி வார இறுதி நாட்களில் பணியை பங்கிட்டு சுத்தம் செய்தல், மரம் நடுதல், சுவற்றில் வர்ணம் பூசுதல் போன்ற காரியங்களை செய்து வருகின்றனர்.
5. சுத்தம் செய்த பின்னர், அந்த பகுதி மக்களிடம் ஒவ்வொரு வீடாக சென்று சுத்தமாக வைத்து கொள்ள விழிப்புணர்வு செய்துள்ளனர்.
பின்பற்றிய தாரக மந்திரங்கள்.
1. பேச்சை குறையுங்கள், வேலையை மட்டும் செய்யுங்கள்.
2. நீங்கள் முன்வந்து ஆரம்பிக்கும் போது, பலரும் உங்களை பின்தொடருவர்.
3. உங்களை பாராட்ட வேண்டும் என எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம்.
4. யாரிடமும் பணம் எதிர் பார்க்க வேண்டாம். நீங்கள் 5 பேர் சேர்ந்து 200 ரூபாய் செலவு செய்து ஆரம்பித்தால், அதுவே மாற்றத்திற்கு ஒரு சிறந்த வழி.
5. எதிர்பார்க்கும் மாற்றம் உருவாக நீயே காரணமாய் இரு - மகாத்மா காந்தி
உலகத்தை மாற்ற வேண்டுமானால், உங்களது வீதியில் இருந்து மாற்றம் ஏற்படுத்துங்கள். உங்கள் வீதியில் மாற்றம் உருவாக, யாருக்காவும் காத்திராமல், நீங்களே ஆரம்பியுங்கள்.
ஒரு நல்ல விழயம் சொல்ல, அவர் யாரோ ஒருவராகவோ இருக்கலாம். முகம் முக்கியமல்ல...
இது பெங்களூரில் எடுக்கப்பட்ட காணொளி. இதை போல, நமது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. நாம் அவர்களிடமும் பேசி உள்ளோம். விருப்பம் உள்ளவர்கள், இங்கே பதியலாம். அல்லது நீங்களே அவர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்கள் புதிதாக உங்கள் பகுதியில் ஆரம்பிக்கலாம். Please share.
மக்கள் சார்ந்த அமைப்பு: facebook மற்றும் whatsapp என மட்டுமல்லாமல், அதை தாண்டி ஒருவனால் என்ன செய்ய முடியுமோ, அப்படி சிறிய சமூக மாற்றம் செய்தால் தான் மிக பெரிய மாற்றம் உருவாக காரணமாய் இருக்கும்.
உதாரணமாக உங்கள் பகுதியில் உள்ள 3 தெருவில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும்படி அவர்களுக்கு தேவையானதை கற்று தரலாம். மரம் வளர்ப்பு, விவசாயத்தின் அவசியம், சேமிப்பு பற்றிய விழுப்புணர்வு என பலவற்றை கற்று தரலாம்.
யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். இதை படிக்கும் நீங்கள் ஆரம்பியுங்கள். உங்களை பார்த்து பலர் முன்வருவர். ஆரம்பித்த பின் உங்கள் கருத்துகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வையுங்கள்.
எங்கள் தெருவில் வைக்கபட்ட மரக்கன்றுகளுக்கு ஒவ்வொரு வீட்டில் உள்ள குழந்தைகளை தண்ணீர் ஊற்ற சொல்லி கொடுத்தோம். அவர்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிய காட்சியை ஏற்கனவே பதிவு செய்தோம்.
நாம் ஏற்கனவே பதிவு செய்தவை உங்களுக்காக...
1. பொது இடத்தில் மரம் நடுவது.
2. அரசு அதிகாரியிடம் அனுமதி பெற்று பொது இடத்தை சுத்தம் செய்வது.
3. தேவையானவர்களுக்கு இரத்த தானம் செய்வது.
4. குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு.
5. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்வது.
6. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வது.
7. சாலை போக்குவரத்து விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு.
8. புகை, மது, தொற்று நோய் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு.
9. இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு.
10. அடிப்படை சட்டம் பற்றிய விழிப்புணர்வு.
11. மக்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
12. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கலந்தாலோசனை கூட்டம் நடத்துவது.
இது போன்ற மக்கள் பணியை பலர் செய்து, ஒரு சமூக மாற்றம் உருவாக காரணமாய் இருப்போம். சிறு சிறு குழுக்களாக பிரிந்து செய்யலாம். வேறு ஏதாவது இது போன்று இருந்தாலும் செய்யலாம். அனைவரும் வேலைக்கு செல்பவர்கள் அல்லது கல்லூரிக்கு செல்பவர்கள். ஆகவே ஒவ்வொருவரால் வார இறுதி நாட்களில் என்ன செய்ய முடியுமோ, அதை நாம் செய்யலாம். உங்களது தெருவில் இருந்து கூட ஆரம்பிக்கலாம்.
அனைத்து விழிப்புணர்வுப் பதிவுகளும் மின்னஞ்சலாக பெற,
நமது Google குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும்.
நன்றி,
இளையதலைமுறை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval