தமிழகத்தில் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மக்களில் 80% முஸ்லிம்கள்தான், இவர்கள் கஷ்டத்தை பற்றி கவிதை, பேச்சு, எழுத்து என பொழம்பி தள்ளி விட்டோம். இதை மாற்ற எந்தளவுக்கு செயளில் இறங்கி உள்ளோம், என்ன திட்டத்தை வைத்துள்ளோம். வீட்டுக்கு ஒருவர் இரணுவத்தில் என்பதை பல நாட்டின் சட்டத்தை கேள்வி பட்டிருப்போம்
இனி முஸ்லிம்கள் நம் வீட்டுக்கு ஒரு ஆண் இருக்க வேண்டும் என்ற முடிவை திடமாக எடுக்க வேண்டும் அப்படி ஊரில் தமது நாட்டிலையே அவருக்கான வேலையை, தொழிலை உருவாக்க முழு முயர்ச்சியுடன் ஈடுபட வேண்டும் அவரிடம் அதிக சம்பளம் இல்லை என்றாலும் வீட்டில் ஒரு ஆண் துணை என்ற சிறப்பு நிறவேறிவிடும். இனி குழந்தைகள் படிக்கும் போது அவர்களுக்கு சொந்த நாட்டிலையே எப்படி அரசு உத்தியோகத்தை பெறுவது, எப்படி தொழிலை வெற்றிகரமாக செய்வது மற்றும் மொழி திறமையுடன் அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் இதை சமுதாயம் முழுவதும் உணர்ந்து செயல்பட்டால் இரண்டு தலைமுறையின் முடிவில் இதற்க்கான கணியை பரிக்கலாம். பணம் என்பதை தாண்டி சிறப்பான, மகழ்சியான குடும்பத்தை, சமுதாயத்தை உருவாகுதலில்தான் வாழ்வின் அர்த்தம் பொதிந்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval