தலைவலி அனைவருக்குமே வரும் ஓர் பொதுவான பிரச்சனை தான். சாதாரண தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தலைவலி வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதில் உணவுகளும் ஒன்று.
ஆய்வு ஒன்றில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் சிலருக்குத் தலைவலியைத் தூண்டுவதாக தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் தலைவலியால் அடிக்கடி கஷ்டப்படுபவராயின் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளாதீர்கள்.
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பின், சிவப்பு மிளகாய் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாதீர்கள்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்றவற்றில் தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை உள்ளது. இவை தலைவலியைத் தூண்டிவிடக்கூடியவை. எனவே தலைவலி இருப்பவர்கள், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
காபி உங்கள் சோர்வை நீக்கி, உங்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். இருப்பினும் எதற்கெடுத்தாலும் காபியை அதிகமாக குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கமின்மையை ஏற்படுத்தி, தலைவலியைத் தூண்டிவிடும்.
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் ஐஸ் க்ரீம். ஆனால் இந்த ஐஸ் க்ரீம் தலைவலியைத் தூண்டிவிடும் பொருள் என்பது பலருக்கும் தெரியாது. இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், இது தலைவலியைத் தூண்டிவிடும். மேலும் ஆய்வுகளில் பங்கு பெற்ற பலரும் ஐஸ் க்ரீம் உட்கொண்ட பின் தலைவலியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval