Thursday, January 14, 2016

இது ஒரு அதிசய கிராமம் வீடுகள் தோறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்

201601141045067716_Madho-Patti-a-village-where-every-house-has-an-IAS-officer_SECVPF
உத்தரபிரதேச மாநிலம் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள  மதோட்டி கிராமம் ஒரு ஆச்சரியமான கிராமம் ஆகும் இங்கு  மாநிலத்திற்கு தேவையான அத்தனை ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர். வீடுகள் தோறும் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த கிராமத்தில் மட்டும் 75 வீடுகள் உள்ளன. இதில் 47 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.
இந்த அதிசயம் 1914 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது முஸ்தபா ஹூசைன் என்பவர்தான் முதலில் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் இடம் பெற்றார். இவர்  பிரபல கவிஞர் வமிக் ஜவுனபுரியா தந்தையாவார்.
அது போல் 1952 ஆம் ஆண்டு  இந்து பரகாஷ் என்பவர்  சிவில் சர்வீஸ் பரீட்சையில்  2-வது இடம பிடித்து  ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.அதில் இருந்து இந்த கிரமாத்தில் உள்ளவர்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை.
மேலும் இந்த கிராமத்தில் உடன் பிறப்புகள் நான்கு பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகி  தனிப்பட்ட சாதனையும் நிகழ்த்தி உள்ளனர்.  வினய் குமார் சிங் என்ற ஒரு சகோதரர் 1955 ஆம் ஆண்டு  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். அவர் பீகாரின் தலைமை செயலாளர் பதவி வரை உயர்ந்தார்.
1964 ஆம் ஆண்டு வினய்யின் 2 சகோதரர்கள்   சத்ரபால் சிங்  மற்றும் அஜய் குமார் சிங்   சிவில் சர்வீஸ் பரீட்சையில் வெர்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார்கள்.சத்ரபால் சிங்  தமிழக அரசின் தலைமை செயலாளராக பணி புரிந்து உள்ளார்.
4 வதுச் அகோதரர் 1968 ஆம் ஆண்டு  சஷிகாந்த் சிங் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தவிர இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் மிகப்பெரிய அதிகாரிகளாகவும் உள்ளனர். சில சந்தர்ப்பங்களில், வீட்டில் உள்ள முழு குடும்பமும் இந்த கிராமத்தில் சிவில் ச்ர்வீசில் உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval