Friday, January 15, 2016

மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற எளிய வழிமுறைகள்.!!

How-To-Connect-PC-Internet-to-Android-Mobile-Phone-Via-USB-Cable-Without-Rooting1
மொபைல் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாக்கவும், மொபைல் போனின் வேகத்தை அதிகரிக்கவும் இந்த தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருக்கின்றது. முன்னதாக இந்த தகவல் பரிமாற்றம் கடினமாகவும், சற்றே விலை உயர்வாகவும் இருந்தது. ஆனால் புதிய தொழில்நுட்பங்களின் வரவு, இந்த முறையை முற்றிலும் மாற்றியமைத்திருப்பதோடு இந்த பணியை சுலபமாகவும் மாற்றியுள்ளது. மொபைல் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கணினிக்கு மாற்றும் எளிய வழிகள்…
வாடிக்கையாளர்கள் வை-பை அக்செஸ் பாயின்ட்களை கொண்டு தங்களது தகவல்களை மாற்ற முடியும். வை-பை அக்செஸ் மூலம் இணைக்கப்பட்டு கருவிகளில் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.
க்ளவுட் சார்ந்த செயலிகளை கொண்டு புகைப்படம், பாட்டு, மற்றும் இதர தரவுகளை நேரடியாக க்ளவுட் சேவைகளில் பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கு கூகுள் டிரைவ், ஒன் டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற சேவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ப்ளூடூத் மூலம் தகவல்களை பரிமாறி கொள்வது சற்றே பழைய முறை தான். இருந்தும் உங்களது மொபைல் கருவிகளை பேர் செய்து கொண்டு அவைகளுக்கு பாஸ்வேர்டு செட் செய்யலாம். இது போன்று செய்யும் போது உங்களது தகவல் மேலும் பாதுகாக்கப்படுகின்றது.
தகவல்களை மொபைலில் டைப் செய்து கணினி மூலம் அதனினை மற்றொருவர் இயக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ மின்னஞ்சல் தான் சரியான தேர்வாக இருக்கும். மக்கள் இன்னமும் மின்னஞ்சல் பயன்படுத்தி வருவதால் இம்முறை அதிக பயன் தரும்.
பார்க்க பென் டிரைவ் போன்றே காட்சியளிக்கும் இந்த ஓடிஜி டிரைவ் மொபைல் போன் மற்றும் கணினி என இரண்டிலும் இணைத்து பயன்படுத்த வழி செய்கின்றது. இதனால் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிமையாக கணினிக்கும் பரிமாற்றம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval