Saturday, January 16, 2016

உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி ஆலையை நிறுவுகிறது மத்திய பிரதேசம்:

201601162221155949_Madhya-Pradesh-inks-pact-with-IFC-to-set-up-worlds-largest_SECVPF
உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள குர் தெசிலில் அமையவுள்ளது. 1,500 எக்டேர்கள் பரப்பளவில், ரூ.4,500 கோடி செலவில் இந்த ரேவா அல்ட்ரா-மெகா சோலார் பவர் பிளாண்ட் உருவாகவுள்ளது.
750 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக உலக வங்கி குழுமத்தில் உறுப்பினராக உள்ள சர்வதேச நிதிக் கழகத்துடன் (IFC) மத்திய பிரதேச மரபுசாரா எரிசக்தி வளர்ச்சிக் கழகம்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இன்று கையெழுத்திட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval