Friday, January 22, 2016

கைநிறைய சம்பளம் வாங்கியும் வாழ்வில் நிம்மதியில்லை..! - விவாகரத்து வழக்குகளில் முதலிடத்தில் ஐடி ஊழியர்கள்

அதிக சம்பளம் பெறும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களே விவாகரத்து வழக்கு தொடுப்பதில் முதலிடத்தில் உள்ளனர். சென்னையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்களை தொடங்கும் முயற்சியில் நீதித்துறை இறங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக திருமணம் முடிக்கும் இளம் தம்பதியரில் 10 சதவீதம் பேர் 6 மாதங்களுக்குள், நீதிமன்ற படியேறி விவாகரத்து வழக்கு தொடுக்கின்றனர். “இதற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை இல்லாததே முக் கிய காரணம்” என்கிறார் தமிழ் நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சாந்தகுமாரி.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
‘கல்லானாலும் கணவன், புல் லானாலும் புருஷன்’ என்று இருந்த காலம் இப்போது மலையேறிவிட் டது. கல்வி, வேலை, கைநிறைய சம்பளம் என இந்த மூன்றும் பெண் களுக்கு தனித்து இயங்கும் சக்தி யைக் கொடுத்துள்ளது. இதனால் ஆண்களை சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இப்போது பெண்களிடம் இல்லை.
மேலை நாடுகளில் திருமணம் ஒரு காகித ஒப்பந்தமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தி யாவில் திருமணம் என்பது புனிதச் சடங்கு. இதில் கணவன், மனைவி என்ற பந்தத்தைத் தாண்டி மூன்றா வது நபர் குறுக்கிடும்போதுதான் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது.
இப்போது மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போன்ற கார ணங்களாலும் இளம் தம்பதியர் அதி கமாக விவாகரத்து கோருகின்றனர்.
விவாகரத்து கோரி வழக்கு தொடர்பவர்களில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் முதலிடத்தில் உள்ளனர். கைநிறைய சம்பளம் வாங்கியும் அவர்கள் வாழ்வில் நிம்மதியில்லாமல் நீதிமன்ற படியேறி வருகின்றனர்.
இரண்டாவதாக கல்வி நிலை யங்களில் பணிபுரிபவர்களும், அதற்கு அடுத்த இடத்தில் போலீஸ் உள்ளிட்ட இதர துறையினரும் உள்ளனர்.
சில நேரங்களில் பாலியல் இச்சை தீர்ந்ததும் திருமண பந்தம் புளித்து விவாகரத்து தேட வைக்கிறது. அதேபோல் காதலித்தபோது பார்த்த காதலனின் பிம்பம், கல் யாணத்துக்குப் பிறகு நிஜ வாழ்க் கையில் மாயமாகி விடுகிறது என்ற கோபமும் பெண்களை விவாகரத்து வாங்கத் தூண்டுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சென் னையில் 2 ஆயிரத்துக்கும் குறை வான விவாகரத்து வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் உள்ள 4 குடும்ப நல நீதிமன்றங்கள் போதவில்லை எனக்கூறி, மேலும் 4 நீதிமன்றங்களை புதிதாகத் திறக்க நீதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தளவுக்கு விவகாரத்து வழக்குகளின் பெருக் கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது.
தமிழகத்தில் விவாகரத்து வழக் குகளின் எண்ணிக்கை குறைய, வழக்கு தொடர்வதற்கு முன்பா கவே தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நிச்சயமாக 10 முதல் 20 சதவீத வழக்குகளை தவிர்க்கலாம். ஆனால், தற்போது வழக்கு தொடர்ந்த பிறகுதான் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
அதுபோல ஏற்கெனவே மன முடைந்து குடும்பநல நீதிமன்ற படி யேறுபவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும்.
குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தவர்களை அமர வைத்து பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதித்துறை முன்வர வேண்டும். குறிப்பாக வாய்தா போடும் தேதியை 2 மாதங்களுக்கு ஒருமுறை என தள்ளிப்போடக் கூடாது.
இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக விவாக ரத்து வழக்குகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும் என்றார்.
courtesy;The Hindu

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval