ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்துஅந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவியின் பள்ளிப்படிப்பு முடியும் மாதமான மார்ச் 26ம் திகதி வரை ரயில் நிலையத்தை மூட வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், அந்த மாணவி ரயில் நிலையத்திற்கு வரும் சரியான நேரங்களில் மட்டும் அந்த பாதை வழியாக ரயில் சேவையை நடத்திவருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியது.
சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த நெகிழ்ச்சிகரமான தகவல்கள் இணையத்தளவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக ரயில் நிலையத்தையே மூடாமல் நடத்தி வருவதாக கூறப்படும் ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval