காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் தங்கி இருந்தபோது, அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்தார். காமராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க விரும்பினார்.
ஆனால் காமராஜர் சந்திக்க மறுத்து விட்டார். உடனே உதவியாளர் அதிர்ச்சி அடைந்து, ''உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே உங்களை பார்க்க விரும்பும் போது...'' என்று இழுத்தார்.
அதற்கு காமராஜர் நிதானமாகப் பதில் சொன்னார், ''அவரு பெரிய ஆளா இருக்கலாம்ன்னேன். யார் இல்லைன்னது? நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனாரு, இதே நிக்சனை பார்க்க விரும்பினாரு.
ஆனா இந்த நிக்சன் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னேன். நம்ம ஊர்க்காரரைப் பார்க்க
விருப்பமில்லாத வரை நாம ஏன் பார்க்கணும்னேன்?'' என்றார்.
விருப்பமில்லாத வரை நாம ஏன் பார்க்கணும்னேன்?'' என்றார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval