அவர் நாடாளுமன்றத்திற்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்றார்.நிகழ்ச்சிகளுக்கு உரை நிகழ்த்த ரெயிலில் பயணித்தார்.
21 ஆண்டுகள் எம்.பியாக பதவி வகித்தும் அவர் எதனையும் சம்பாதிக்காத ஏழ்மை நிலையிலேயே மரணித்தார்.அப்துல் நாஸர் மஃதனி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது கேரளாவில் என்.டி.எஃப் போன்ற அமைப்புகள் தவிர வேறு யாரும் கவனிக்காது இருந்த வேளையில் கோவை சிறைக்குச் சென்ற சேட் சாஹிப், அப்துல் நாஸர் மஃதனியின் நிலைமையைக் கண்டுவிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உடைந்து அழுதார்.
பாபரி மஸ்ஜித் இடிப்புக்காரணமான அன்றைய பிரதமர் நரசிம்மராவின் முகத்திற்கு நேராக,’நீங்கள் ஆணும், பெண்ணும் இல்லாதவர்’ என்று துணிச்சலாக கூறியவர்.பாபரி மஸ்ஜித் இடிப்பை தடுக்க முடியாத காங்கிரசுடன் கூட்டணி தேவை இல்லை என்று தனது தாய்க்கட்சியிடம் கூறியபோது அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் சமுதாய உணர்வோடு அக்கட்சியில் விலகினார் சேட் சாஹிப்.
ஆடம்பர அரசியல் வாதிகள் மத்தியில் சாதாரண மனிதனாகவும், சமுதாய உணர்வோடும் வாழ்ந்த இந்த எளிமையான மனிதரை சமூகம் மறந்துவிட்டது போலும்.
--> எண்ணச்சிதறல்கள் எனும் பக்கத்திலிருந்து..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval