Saturday, January 30, 2016

மணிக்கு 28 ஆயிரம் கி.மீ வேகம்நியூயார்க் டூ லண்டன் 11 நிமிடத்தில் பயணிக்கலாம்

antipode-future-hypersonic-jet-concept

‘லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 11 நிமிடத்தில் செல்லும் வகையில் ‘ஆன்டிபாட்’ என்ற புதிய விமானத்தை கனடா நாட்டு விமான  நிறுவனத்தின் என்ஜினியர் சார்லஸ் வடிவமைத்துள்ளார். ஒலியின் வேகம் மணிக்கு 1195 கிலோமீட்டர். இது 1 மேக் என அலகிடப்படுகிறது. 2 மேக்  வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்ட் விமானம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது.
அடிக்கடி விபத்தை சந்தித்ததால் தற்போது அது  பயன்பாட்டில் இல்லை.
இந்நிலையில், கனடாவின் பம்பார்டியர் விமான நிறுவனத்தின் என்ஜினியர் சார்லஸ் பொம்பார்டியர் என்பவர் ‘ஸ்கிரீமர்’ எனும் 10 மேக் வேகத்தில்  (மணிக்கு 12,000 கிலோமீட்டர் பயணிக்கும் விமானத்தை கடந்தாண்டு வடிவமைத்தார். இந்த விமானத்தில் 4 இறக்கைகள் இருக்கும். இதில் 75 பயணிகள்  செல்லலாம். விமான நிறுவனங்கள் ஊக்குவித்ததைத் தொடர்ந்து, சார்லஸ் அடுத்த கட்ட வடிவமைப்பு குறித்து தீவிர கவனம் செலுத்தினார். அதன்  விளைவாக, 24 மேக் வேகத்தில் பயணிக்கக் கூடிய ‘ஆண்டிபாட்’ என்ற விமானத்தை உருவாக்கியுள்ளார். இதில் 10 பேர் பயணம் செய்யலாம். இந்த  விமானம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக கடந்து விடும்.
இங்கிலாந்தின் லண்டன் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் இடையேயான 5,566 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 11 நிமிடத்தில் கடந்து விடமுடியும்.  அதுபோல், நியூயார்க்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு 12 நிமிடம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 22 நிமிடம், ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கு 32 நிமிடங்களில் பயணிக்கலாம் என சார்லஸ் கூறுகிறார். ஆண்டிபாட் குறித்து சார்லஸ் விளக்கம் அளிக்கையில், ‘‘இந்த விமானத்தின்  இறக்கைகளில் ராக்கெட் பூஸ்டர்கள் பொருத்தப்படும். இது விமானத்தை 5 மேக் வேகத்தில் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லும். அதன் பின்,  ராக்கெட் பூஸ்டர்கள் விமானத்தில் இருந்து பிரிந்து, ஏவுதளத்தை வந்தடையும். 40 அடி உயரம் விமானம் சென்றபின், அதில் உள்ள சூப்பர்சோனிக் கம்பஸ்டன்  இன்ஜின் இயக்கப்படும். இது 24 மேக் வேகத்தில் விமானத்தை இயக்கும்.
இந்த அதிவேகம் காரணமாக ஏற்படும் அதிக வெப்பத்தை தவிர்க்க, விமானத்தின் மேற்பரப்பில் துவாரங்கள் உள்ளன. காற்று மூலம் மேற்பரப்பின்  வெப்பத்தை தணிக்கும் இந்த தொழில் நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது. ராணுவ பயன்பாடு மற்றும் உயர்அதிகாரிகளின் பயணத்துக்கு இந்த விமானம்  மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் உலகின் எந்த பகுதிக்கும் பயணிக்கலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval