Friday, January 15, 2016

கழிவுநீரை சுத்திகரிக்க இயந்திரம் மாணவிகள் கண்டுபிடித்து சாதனை

கோவை அவினாசிலிங்கம் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கங்கா பரமேஸ்வரி(16) மற்றும் வினோதினி(16) ஆகியோர் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயம், மீன் வளர்ப்பு போன்றவற்றிற்க்கு பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித் துள்ளனர்.
கோவையில் 36,579 தொழில்நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழில் நிறுவனங் களில் இருந்து தினமும் 10 சதவீதத் திற்கும் மேல் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் ஆறுகள் மற்றும் குளங்களில் கலந்து தண்ணீர் சம்பந்தமான பல நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும், கழிவுநீர் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டிற்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனவே, கழிவு நீரை சுத்தப்படுத்தி அதனை மீண்டும் நம் பொது உபயோகத்திற்கும், மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த "வாட்டர் சேவர் லைப் சேவர்"
பாராட்டுவோம் இந்த மாணவிகளின் சாதனைகளை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval