Monday, January 18, 2016

கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல



கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்.
மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இ-வாகன் பீமா என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி வாகனங்களுக்கான காப்பீடுட்டு நடைமுறைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனால் வாகனங்களுக்கான காப்பீட்டு ஆவணங்கள் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட் போனுக்கு மின்னஞ்சலாக அனுப்பப்படும்.
மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களுக்கு குறுஞ்செய்தி வடிவில் அனுப்பப்படும். மேலும் க்யூ.ஆர். குறியீடு ஒன்றும் கொடுக்கப்படும். இந்த க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் காப்பீட்டு விபரங்களை அதிகாரிகள் தெரிந்துக்கொள்ள முடியும்.
இந்த திட்டமானது முதல் கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் ஜனவரி 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval