நீங்கள் ஷேர் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் நேரம் ஒதுக்கி இந்த உண்மை சம்பவத்தை எழுதுகிறேன்.
அந்த பெண்ணிற்கு அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு கால் வருகிறது
அவளும் எடுத்து யார் என்று கேட்கிறாள்.
அவளும் எடுத்து யார் என்று கேட்கிறாள்.
அதற்கு அவன் தன் பெயரை சொன்னதும் தனக்கு அறிமுகமில்லாத நம்பர் என்று கருதி காலை துண்டிக்கிறாள்
சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து மறுபடியும் கால்
இவள் எடுத்து பேசுகிறாள்
இவள் எடுத்து பேசுகிறாள்
அதற்கு அவன் ஒரு பேரை சொல்லி அவர்தானே என் அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுகிறது என் அம்மாவிற்கு இரத்தம் கிடைக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார் என்று குரல் உடைந்து பேசுகிறான் .
உடனே இவள் நீங்கள் அழைத்தது ராங் நம்பர்ங்க என்று சொல்லி போனை துண்டிக்கிறாள்.
மறுபடியும் ஒரு வாரம் கழித்து அதே நம்பரில் இருந்து அழைப்பு .இவள் எடுத்து என்ன என்று கேட்கிறாள்.
உங்களை தொந்தரவு செய்வதாக நினைக்காதீங்க இப்போது தான் என் அம்மாவை ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கொண்டுவந்தேன் . என்னமோ உங்களிடம் சொல்லனுமனு தோனுச்சி அதான் கூப்பிட்டேன் .என்று சொல்ல.
இவள் பெண்ணாச்சே! இரக்ககுணத்தால் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து விபரம் கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டாள்.
மறுபடியும் இரண்டு நாள் கழித்து அந்த நம்பரில் இருந்து குட்மார்னிங் என்று செய்தி வருகிறது. இவளும் மரியாதைக்கு பதில் அனுப்புகிறாள்.
இப்படியே அவர்கள் நட்பு பத்து நாட்கள் தொடர்கிறது.
மீண்டும் அவன் அவளை அழைக்க அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் இவளும் எடுத்து பேசுகிறாள்.
மீண்டும் அவன் அவளை அழைக்க அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் இவளும் எடுத்து பேசுகிறாள்.
இப்போது அவளுக்கு அவன் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. இருவரும் சமூக வலைத்தளங்களான , முகநூல் , வாட்ஸ்அப் , என்று தங்கள் காதலை பலப்படுத்துகிறார்கள்.
இவளும் அவன் மீது ஏற்பட்ட குருட்டு நம்பிக்கையால் தன்னை விதவிதமாக படம் எடுத்து அவனுக்கு அனுப்புகிறாள்.
திடீரென ஒரு நாள் அவன் எனக்கு உன்னை நேரில் பார்க்கனும் போல் இருக்கு என்று கெஞ்சுகிறான்.
மறுநாள் தன் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு அவனை சந்திக்க இவள் செல்கிறாள்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் கடைசி ப்ளாட்பார்மில் நின்ற ரயிலில் இருவரும் சந்திக்கிறார்கள் .
அவனை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு இருவரும் கட்டித்தழுவி அன்பை பகிர்கிறார்கள்.
ரயில் சிறிது தூறம் சென்றதும் கண்ணாடிகள் அடைத்த அந்த ஏசி பெட்டியில் தனிமை அவர்களை தவறு செய்ய வைக்கிறது.
அன்று முழுவதும் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இரவு அவரவர் வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
மறுநாள் போன் வரவில்லை இவளும் அதை பொருட்டாக நினைக்கவில்லை.
மூன்றாம் நாள் போன் வருகிறது . அவன் சொல்கிறான் எனக்கு வெளி மாநிலத்தில் வேலை அதனால் இடையிடையே பேசுகிறேன் என்று .
இந்த அப்பாவியும் சம்மதிக்கிறாள்.
இப்படியே போன் வருவது சுத்தமாக நின்று போகிறது.
திடீரென ஒருநாள் இரவு ஒரு அழைப்பு இவளும் அவன் தான் அழைக்கிறான் என்று பாய்ந்து ஓடி எடுக்கிறாள் . எடுத்தவள் ஏமாந்து போனாள். ஆம் அது ஒரு புதிய நம்பர்
இவளும் போனை எடுத்து யார் என்று கேட்க எதிர்முனையில் இருந்தவன்
என்னை தெரியலையா நான் உன் பள்ளிப்பருவ வகுப்பு தோழன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு
மேலும் தொடர்கிறான் நீ பள்ளியில் படிக்கும் போது எவ்வளவு நல்ல பெண்ணாய் இருந்தாய் . ஆனால் இப்பொழுது உன் மீது இருந்த அந்த மரியாதையே போய்விட்டது என்று சொல்கிறான்.
என்ன சொல்கிறாய் நான் என்ன தவறு செய்தேன் என்று அவள் கோபத்துடன் கேட்க
எதிர்முனையில் இருந்தவன் சொல்கிறான்
ரயிலுக்குள் நீ ஒரு இளைஞனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களும், படங்களும் முகநூலிலும் ,ஆபாச வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வந்துள்ளது என்று .
ரயிலுக்குள் நீ ஒரு இளைஞனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களும், படங்களும் முகநூலிலும் ,ஆபாச வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வந்துள்ளது என்று .
பதறிப்போனால் அவள் செய்வதறியாது போனை துண்டித்தவள்
மீண்டும் தன் காதலனுக்கு போன் செய்கிறாள் இந்த நம்பர் தற்காலிகமாக உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
முகநூல் கணக்கை பார்க்கிறாள் .முகநூல் கணக்கையும் காணவில்லை.
அப்போதுதான் தெரிகிறது தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவளுக்கு.
அவமானம் தாங்காமல் ஊருக்கும், ஊர் வாயிக்கும் பயந்து தன்னுடைய துப்பட்டாவை எடுத்து பேனில் மாட்டி தன் வாழ்க்கையை முடித்து கொள்கிறாள்.
மறுநாள் இவளுடைய அடக்கம் ஊரே திரண்டு இவளுக்கு கடைசி காரியங்கள் செய்து கொண்டிருக்கையில்
வேறொரு நம்பரில் இருந்து வேறொரு பெண்ணிற்கு போன் வருகிறது. அவள் எடுக்க இவன் சொல்கிறான்.!!!!!!!!!!!
என் அம்மாவிற்கு ஆப்ரேஷன் ரத்தம் வேணும்....................................
தயவு செய்து பகிருங்கள்
இளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்
இளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval