Saturday, January 30, 2016

உங்க குழந்தை சரியாவே சாப்பிடமாட்ராங்களா? அப்ப இத கொஞ்சம் படிங்க –

1-healthy-foods-22-1453448678
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். அதற்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு கொடுக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். உங்கள் குழந்தையும் இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பிரச்சனை என்றதும் பெரிய அளவில் இல்லை. ஆனால் அதுவே நீடித்தால், அதனால் அவர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாக சிலருக்கு நன்கு பசிக்கும் ஆனால் அவர்களால் சாப்பிட முடியாது. இந்த நிலை தான் சில குழந்தைகளுக்கும் இருக்கும். இப்படி இருந்தால், அவர்களின் உடலில் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். இன்றைய காலத்தில் பல குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு சமைத்துக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் இந்த சத்துக்கள் குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. இது அப்படியே நீடித்தால், அதனால் கவனச்சிதறல், ஞாபக மறதி, உடல் பலவீனம், அடிக்கடி நோய்வாய்ப்படுவது, ஏன் சில நேரங்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறப்பை கூட சந்திக்க நேரிடும்.
குழந்தை பசி எடுத்தும் சாப்பிட முடியாத பிரச்சனையால் அவஸ்தைப்படுவதைப் ற்றி பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இதை அப்படியே விட்டுவிட்டால், உங்கள் குழந்தை தான் கஷ்டப்படும்.
இதை எப்படி கண்டறிவது?
உங்கள் குழந்தை ஜங்க் உணவுகளை மட்டும் அதிகம் விரும்பி உட்கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பொருட்களைக் கொடுக்கும் போது அவற்றை சாப்பிட மறுத்தால், அவர்களின் உடலில் நிச்சயம் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இன்றைய நவீன உலகில் உணவுகளில் கலோரிகள் அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது.
எனவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களில் பால் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்த ஒன்று. மேலும் இது ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஓர் முக்கிய உணவுப் பொருளும் கூட. அத்தகைய பாலை சில குழந்தைகள் குடிக்க மறுப்பார்கள். இதற்கு பாலின் மணம் மற்றும் சுவை தான். ஆனால் அந்த பாலில் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தால், பாலின் மணம் மற்றும் சுவை மாறி, குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் ஓர் பானமாகிவிடும். மேலும் ஹார்லிக்ஸிலும் குழந்தைகளுக்கு வேண்டிய ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval