Saturday, January 16, 2016

ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனமுறை முடிந்தது: போக்குவரத்து நெரிசலால் இன்று விழிபிதுங்கிய டெல்லி:

trapped-in-traffic-L-sXY_A0
டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.
சோதனை முயற்சியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த முதல் தேதி தொடங்கியது. 15-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற்ற இந்த திட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வழக்கம்போல் அனைத்து வாகனங்களும் சாலையில் ஓடத் தொடங்கின.
இதன்விளைவாக, காலை 9 மணியளவில் மத்திய டெல்லி, கண்டோன்ட்மன்ட் பகுதி மற்றும் கிழக்கு, மேற்கு டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 11 மணியளவில் மேலும் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் பிற்பகலில் மோசமடைந்தது.
இதனால், சாலைகளில் அரை கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையாக நிற்க தொடங்கின. மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனமுறை நிரந்தரமாக அமல்படுத்தப்பட்டால்தான் இந்த நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என சில வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval