வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, 12,441 தபால் நிலையங்களில் சி.பி.எஸ். முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
தபால்துறை. இந்த முறையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் எந்த தபால் நிலையத்தில் வேண்டுமானாலும், தங்களது கணக்குகளை இயக்க முடியும். வங்கி தொடர்பான சேவைகளையும் பெற முடியும்.
இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம். மையங்களை திறக்க இந்திய தபால்துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல், கிராமப்புற தபால் நிலையங்களில் வரும் 2017-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியுடன் இயங்கும்பயோமெட்ரிக் கருவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 300 ஏ.டி.எம். மையங்கள் தபால்துறை சார்பில் இயங்கி வருகின்றன. 25 ஆயிரம் டிபார்ட்மண்டல் தபால் நிலையங்கள் தவிர நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமப்புற தபால் நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval