Wednesday, January 13, 2016

💡"எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது 😷 என தெரியுமா"😎?

Image result for watermelonதர்பூசணி🍉 மற்றும் பால்🍼
தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
பப்பாளி மற்றும் தண்ணீர்💦
பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.
முட்டை🍳 மற்றும் பால்🍼
இந்த உணவுச் சேர்க்கை உடல் எடையை அதிகரிக்கும் என்று எடையை அதிகரிக்க நினைக்கும் பலர் இதை சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.
வாழைப்பழம்🍌 மற்றும் பால்🍼
வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval