Thursday, January 14, 2016

நீங்கள் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவரா?

09-Scribeலேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும்.
அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ என்று பெயர். லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும்.
லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் இரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.
மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம். துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன் கொண்ட ‘கூலிங் பேடு’ உபகரணங்கள் வந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து லேப்டாப்பை சற்று தள்ளியே வைத்திருங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval