Sunday, January 17, 2016

20-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ‘கவுண்ட்டவுண்’ இன்று தொடங்குகிறது:

rocketjan18
கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் வரும் 20-ந் தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுவதையொட்டி, அதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று தொடங்குகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 5-வது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-இ யை பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து 20-ந் தேதி காலை 9-31 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதற்காக எரிபொருள்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இயற்கை பேரிடர் மேலாண்மை
பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் 2-வது ஏவுதளத்தில் இருந்து வரும் 20-ந் தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோமீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலைநிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும்.
இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக்கெட்டை ஏவுவதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று பகல் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval